\
வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் - சிசிடிவி வீடியோ 

வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் - சிசிடிவி வீடியோ 

வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் - சிசிடிவி வீடியோ 
Published on: 

பஞ்சாபில் வீட்டின் வெளியே சாலையில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடந்த முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம், லூதியனா ரிஷி நகர் பகுதியில் ஒரு பெண்மணி தனது குடும்பத்தினருடன் நேற்று வீட்டிற்கு வெளியே சாலையில் படுத்து தூங்கிகொண்டிருந்தார். அவருடன் தனது 4 வயது குழந்தையும் படுத்து தூங்கிகொண்டிருந்தார். 

அப்போது அங்கு ட்ரை சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தூங்கி கொண்டிந்த குழந்தையை தூக்கி சைக்கிளில் போட்டு கடத்த முயன்றார். உடனே சத்தம் கேட்டு குழந்தையின் தாயார் விழித்து கொண்டு கூச்சலிட்டார். மேலும் குழந்தையை அந்த நபரிடம் இருந்து மீட்டார். சுதாரித்து கொண்ட அந்த நபர் அனைவரும் வருவதற்குள் அங்கிருந்து தப்பி சென்றார். 

இதையடுத்து போலீசார் அந்த நபரை கண்டறிந்து கைது செய்துள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com