இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையானவர்!

இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையானவர்!

இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையானவர்!
Published on

இறந்து 2 ஆண்டுகள் கழித்து ஒருவர் தந்தை ஆகியுள்ளார். இந்த மருத்துவ மாயாஜாலம் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராஜஸ்ரீ பாட்டீல். இவரது மகன் பிரதமேஷ் பாட்டீல் ஜெர்மனியில் பணி புரிந்துகொண்டிருந்த போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முன் முன்னெச்சரிக்கையாக விந்தணுவை பாதுகாப்பாக சேமித்து வைத்தார் பிரதமேஷ். புற்றுநோய் முற்றி பிரதமேஷ் பாட்டீல் 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். 

தனது மகன் இறந்துவிட்டாலும் அவரது விந்தணுவை கொண்டு குடும்ப வாரிசை பெற நினைத்தார் ராஜஸ்ரீ. இதையடுத்து சேமிக்கப்பட்ட விந்தணுவை கொண்டு வாடகைத்தாய் கருவுற வைக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் அந்த வாடகை தாய்க்கு பிறந்தன. மகன் இல்லாத குறையை தீர்க்க பேரனும் பேத்தியும் வந்து சேர்ந்ததை கண்டு ஆனந்தத்தில் திளைத்துள்ளார் பாட்டி ராஜஸ்ரீ. மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இந்த அதிசயத்திற்கு காரணம் என பிரசவம் பார்த்த மருத்துவர் சுப்ரியா புராணிக் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com