புனே: ஓட்டுநருக்கு வலிப்பு - 10 கி.மீ தூரம் பேருந்தை இயக்கிய பெண் பயணி

புனே: ஓட்டுநருக்கு வலிப்பு - 10 கி.மீ தூரம் பேருந்தை இயக்கிய பெண் பயணி
புனே: ஓட்டுநருக்கு வலிப்பு - 10 கி.மீ தூரம் பேருந்தை இயக்கிய பெண் பயணி

பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண் பயணி ஒருவர் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது.

ஷிரூர் பகுதியில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது, பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, பேருந்தில் இருந்த யோகிதா சதாவ் என்ற 42வயதான பெண், சிறிதும் தயங்காமல் பேருந்தை சாதுர்யமாக இயக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.

வலிப்பு ஏற்பட்ட ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்த பின், பத்து கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை இயக்கி, மற்ற பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கி விட்டுள்ளார். யோகிதாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com