காஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா

காஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா

காஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா
Published on

காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படவில்லை என்றால், புல்வாமா வகையான போன்று தாக்குதல் தொடரும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படவில்லை என்றால், புல்வாமா வகை தாக்குதல் போன்று இன்னும் தாக்குதல் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த ஃபரூக் அப்துல்லா, புல்வாமா தாக்குதலில் காஷ்மீர் மக்களின் பங்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். “ தயவு செய்து எங்களை தாக்காதீர்கள். நீங்கள் எங்கள் குழந்தைகளை குறிவைக்கிறீர்கள். பயங்கரவாதிகளுடன் நாங்கள் இல்லை. நாங்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டும். கல்வி பயில வேண்டும். எங்களது சாப்பாட்டிற்காக நாங்கள் உழைக்க வேண்டும். என்ன நடந்ததோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. காஷ்மீர் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படாத வரை இதுபோன்ற தாக்குதல் தொடரும் ” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் காஷ்மீர் மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஃபரூக் அப்துல்லா, எத்தகைய கோஷங்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com