\
காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்

காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்

காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்
Published on

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சந்த்கம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதில் தாக்குதல் தரப்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புல்வாமா பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com