ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு: முக்கிய பயங்கரவாதி பலி !

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு: முக்கிய பயங்கரவாதி பலி !

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு: முக்கிய பயங்கரவாதி பலி !
Published on

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில், புல்வாமா தாக்குதலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புல்வாமா மாவட்டத்தின் பிங்லிஷ் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே விடிய விடிய சண்டை நீடித்தது. இதில், ஜெய்ஷ் இ அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி முடாசிர் அகமது கானும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனாலும் கொல்லப்பட்ட 3 பயங்‌கரவாதிகளின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரி‌ள் தெரிவித்துள்ளனர். 

பிங்லிஷ் பகுதி முழுவதையும் பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கொல்லப்பட்‌டதாகக் கருதப்படும் முடாசிர் அகமது கான் எலக்ட்ரீஷியன் என்றும், 23 வயதாகும் அந்த பயங்கரவாதி, புல்வாமாவைச் சேர்ந்த பட்டதாரி என்றும் கூறியுள்ள அதிகாரிகள், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாகனம் மற்றும் வெடிபொருட்களை ஏற்பாடு செய்தவர் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. அதற்கு பிறகு இரு நாட்டு எல்லையில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com