52 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சரவை பட்டியலை தயார் செய்த புதுச்சேரி அரசு

52 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சரவை பட்டியலை தயார் செய்த புதுச்சேரி அரசு
52 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சரவை பட்டியலை தயார் செய்த புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் தேர்தல் முடிவு வெளியாகி 52 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் இன்றுதான் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வழங்கியுள்ளார். இதையடுத்து அமைச்சரவை நாளை பதவியேற்கக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மே 7 ஆம்தேதி புதுச்சேரி முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவியேற்றநிலையில், அமைச்சரவை பங்கீட்டில், பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வந்த இழுபறி காரணமாக இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை இன்று காலை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சரவை பட்டியலை அவரிடம் அளித்தார். இதனால் கடந்த 52 நாட்களுக்கு மேல் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பாஜகவுக்கு 2 அமைச்சர்களும், என்ஆர் காங்கிரசுக்கு 3 அமைச்சர்களும் என இந்த பட்டியலை அவர் வழங்கியுள்ளார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர், நாளை அல்லது வரும் 27 ஆம்தேதி அமைச்சர்கள் பதவியேற்கக் கூடும் எனத்தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சர்கள் பட்டியலில் 5 அமைச்சர்களில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு எம்.எல்.ஏ சாய் சரவணன் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 3 என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களில் லெட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், லெட்சுமிகாந்தன், திருமுருகன், ராஜவேலு, சந்திரபிரியங்கா ஆகியோரில் மூவருக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com