இந்தியா
புதுச்சேரி: மது போதையில் உணவகத்தில் தகராறு செய்த யூடியூப் பிரபலத்தின் மகன் தலைமறைவு
புதுச்சேரி: மது போதையில் உணவகத்தில் தகராறு செய்த யூடியூப் பிரபலத்தின் மகன் தலைமறைவு
மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூ-ட்யூப் சமையல் கலைஞரின் மகனுக்கு போலீசார் வலை. அவரின் உறவினர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
யூ-ட்யூபில் பிரபலமான டாடி ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிநாத், இவர் தனது சித்தப்பா மகன் மற்றும் நண்பருடன் உணவகம் ஒன்றில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்டதோடு உணவகத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து உணவக ஊழியர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிநாத்துடன் மது அருந்திய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

