'அந்த கேரக்டராவே மாறிட்டோம்' - அவதாராக மாறிய புதுச்சேரி தியேட்டர் ஊழியர்கள்

'அந்த கேரக்டராவே மாறிட்டோம்' - அவதாராக மாறிய புதுச்சேரி தியேட்டர் ஊழியர்கள்
'அந்த கேரக்டராவே மாறிட்டோம்' - அவதாராக மாறிய புதுச்சேரி தியேட்டர் ஊழியர்கள்

அவதார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் ரசிகர்களை கவர்வதற்காக அவதார் பட கதாபாத்திரம் போல் திரையரங்க ஊழியர்கள் வேடமணிந்து உற்சாகப்படுத்தினர்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் 'அவதார்'. இப்படி ஒரு சயின்ஸ் - பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அப்படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் - தி வே ஆப் வாட்டர்' படம் உலக அளவில் நேற்று வெளியாகியுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் புதுவை கடலூர் சாலை வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடமணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். மேலும் அவதார் போல் வேடமணிந்து வரவேற்ற ஊழியர்களுடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com