புதுச்சேரி: இந்து முறைப்படி ஆழ்கடலில் நடந்த திருமணம்

புதுச்சேரி: இந்து முறைப்படி ஆழ்கடலில் நடந்த திருமணம்
புதுச்சேரி:  இந்து முறைப்படி ஆழ்கடலில் நடந்த திருமணம்

புதுச்சேரியில் இந்து முறைப்படி ஒரு ஜோடி ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டனர்.


புதுச்சேரியில் அரவிந்தன் தலைமையிலான ஆழ்கடல் பயிற்சி வீரர்கள், ஆழ்கடல் பயிற்சி மட்டுமல்லாமல் ஆழ்கடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வுசெய்து அதை காணொளி மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆழ்கடலில் சுதந்திரதின கொடியேற்றம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என பண்டிகைகளை கொண்டாடிய அரவிந்தன் கொரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் வெளியே வராததால் கடலுக்கு அடியில் எந்தவித்த மாசும் இல்லாமல் சுத்தமாக இருந்த காட்சியையும் பதிவு செய்திருந்தார்.


அதோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணியக்கூடிய முகக் கவசம் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் அவை கடலுக்கு சென்று ஆழ்கடலில் தேங்கி மாசு ஏற்படுத்தியது. இதனை அப்புறப்படுத்தும் பணியிலும் அரவிந்தன் குழுவினர் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலையை சேர்ந்த சின்னதுரை. இவருக்கும் கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இவர் தனது திருமனத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான அரவிந்தை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி கடற்பகுதியில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாத கடல் சூழல் இருந்ததால் புதுச்சேரி மற்றும் நீலாங்கரை கடற்பகுதி ஆழ்கடலில் இன்று காலை சின்னதுரை - ஸ்வேதா திருமணம் இந்து முறைபடி 60 அடி ஆழத்தில் அலங்காரம் செய்யப்பட்ட வளைவுக்குள் நடைபெற்றது. சின்னத்துரை தங்க மாங்கல்ய நாண் அணிவித்து திருமணம் செய்தார். 


பின் ஜோடிகள் இருவரும் ஆழ்கடலிலே ஊர்வலமாக வந்து மாலை மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை செய்து கொண்டனர். இன்று காலை ஆழ்கடலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் குழுவினர் செய்திருந்தார்கள். இந்தியாவிலே ஆழ்கடலில் திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com