\
Puducherry Thattanchavady bypoll results 2026 in NR Congress won
என்.ஆர்.காங்கிரஸ்புதிய தலைமுறை

#ByElectionResults | புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்.. என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

புதுச்சேரி தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.
Published on: 

புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என். ரங்கசாமி தட்டஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். இதில், மங்கலம் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால், தட்டஞ்சாவடி காலியானது. இதையடுத்து அந்த தொகுதியிலும் கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்தும், திமுக சார்பில் சேதுசெல்வமும், காங்கிரஸ் சார்பில் விநாயகமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகுமாரியும் போட்டியினர். அங்கு, 80.81% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து, தட்டாஞ்சாவடியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை முதலே என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் முன்னிலையில் இருந்த நிலையில், 4 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் தற்போது அவர் வெற்றிபெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 13,350 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளை அவர் வீழ்த்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com