Rowdy
Rowdypt desk

புதுச்சேரி: தொழிற்சாலை மீது வெடிகுண்டு வீச முயற்சி - கீழே விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம்

புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு, பிரபல ரவுடியின் காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

புதுச்சேரி உசுடு தொகுதிக்குட்பட்ட கிராம பகுதியான ராமநாதபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் தனது கூட்டாளியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பிரபல ரவுடி சுகன், தான் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை தொழிற்சாலை வாயிலில் வீச முயற்சி செய்துள்ளார்.

police
policept desk

அப்போது வெடிகுண்டு எதிர்பாராத விதமாக ரவுடி சுகன் காலில் விழுந்து வெடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த ரவுடி சுகனை வில்லியனூர் காவல் நிலைய போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெடிகுண்டு வீச்சு தொடர்பாக வில்லியனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு ரவுடி காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி சுகன் மீது கொலை கொள்ளை ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com