புதுச்சேரி| ஆட்சி மகுடம் யாருக்கு? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதே தேதியில், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 16 இடங்கள் பெரும்பான்மை தேவை. இந்த நிலையில், புதுச்சேரியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என இங்கு தெரிந்துகொள்வோம்.
பீப்பிள்ஸ் பல்ஸ்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 16 - 19
காங்கிரஸ்-திமுக: 10 - 12
மற்றவை: 1 - 2
ஆக்ஸிஸ் மை இந்தியா
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 16 - 20
காங்கிரஸ்-திமுக: 6 - 8
மற்றவை: 3 - 7
ஜேவிசி போல்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 15 - 17
காங்கிரஸ்-திமுக: 11 - 13
மற்றவை: 1 - 3
பிரஜா போல்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 19 - 25
காங்கிரஸ்-திமுக: 6 - 10
மற்றவை: 0

