\
புதுச்சேரி அமைச்சர்  கந்தசாமி, அவரது மகனுக்கு கொரோனா தொற்று - ஜிப்மரில் அனுமதி

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி, அவரது மகனுக்கு கொரோனா தொற்று - ஜிப்மரில் அனுமதி

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி, அவரது மகனுக்கு கொரோனா தொற்று - ஜிப்மரில் அனுமதி
Published on


புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளையமகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி ஜிப்மரில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com