கிரண்பேடி மிரட்ட முயற்சிக்கிறார்: புதுச்சேரி அமைச்சர்
அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஆளுநர் கிரண்பேடி மிரட்ட முயற்சிக்கிறார் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி குறித்து பேசிய கந்தசாமி, “ஆளுநராகிய உங்களுக்கு புகார் கடிதம் வந்தால் அதை நீங்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி, அதன்மூலம் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் அனுப்ப வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் ஆளுநராகிய நீங்களே சில நபர்கள் மூலம் புகார் கடிதம் கொடுக்க சொல்கிறீர்கள், அதை நீங்களே பெற்று சிபிஐக்கு அனுப்புகிறீர்கள், பின்னர் நீங்களே நடவடிக்கை எடுப்பேன் என்கிறீர்கள். அரசு அதிகாரிகளை மிரட்டுகிறீர்கள். அமைச்சர்களை மிரட்ட நினைக்கிறீர்கள். ஆனால் அமைச்சர்கள் ஒரு காலத்திலும் பயப்பட மாட்டார்கள். அமைச்சர்கள் எதையும் சந்திப்பார்கள் என்பதை நீங்கள் போகப் போக தெரிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.