பெண் எஸ்.பி.யை நாற்காலியில் அமரவைத்து தூக்கிச் சென்ற காவலர்கள்
ஏனாமிலிருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பெண் எஸ்.பி.யை காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து, தூக்கிச் சென்று வழியனுப்பிவைத்தனர்.
புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அதிகாரி ரட்சனா சிங், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏனாம் பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் 15 எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் ஏனாம் பிராந்தியத்தின் எஸ்.பி யாக இருந்த ரட்சனா சிங் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏனாமில் இருந்து தனது பணிகளை முடித்துக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்ட ரட்சனா சிங்கை, அங்கிருந்த காவலர்கள் ஒரு நாற்காலியில் அமரவைத்து, கார்வரை தூக்கிச் சென்று வழியனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.