இந்தியா
நான் மக்களுக்கான ஆளுநராகவே இருப்பேன்: பதவியேற்ற பின் புதுச்சேரியில் தமிழிசை பேட்டி
நான் மக்களுக்கான ஆளுநராகவே இருப்பேன்: பதவியேற்ற பின் புதுச்சேரியில் தமிழிசை பேட்டி
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். அப்போது பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை தமிழில் வாசித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, “ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும், துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதும் எனக்கு தெரியும். முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பதும் எனக்கும் தெரியும். அனைத்தும் தெரிந்துதான் இங்கு வந்திருக்கிறேன். தமது நடவடிக்கைகள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும். மக்களுக்கான ஆளுநராகவே இருப்பேன்” எனத் தெரிவித்தார்.