புரோக்கர்கள் நிறைந்த அரசாக இருக்கிறது புதுச்சேரி அரசு - நாராயணசாமி குற்றச்சாட்டு

புரோக்கர்கள் நிறைந்த அரசாக இருக்கிறது புதுச்சேரி அரசு - நாராயணசாமி குற்றச்சாட்டு

புரோக்கர்கள் நிறைந்த அரசாக இருக்கிறது புதுச்சேரி அரசு - நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை எளிதில் சந்திக்க முடியாதபடி புரோக்கர்கள் நிறைந்த அரசாக புதுச்சேரி அரசு இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெடிகுண்டு காலச்சாரம் அதிகரித்து வருகிறது. இது பற்றி காவல்துறையோ, ஆட்சியாளர்களோ கவலைப்படவில்லை.

புதுச்சேரியில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடத்து கொண்டிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த ஆட்சியாளர்களுக்கு திராணி இல்லை. இதனை ஆட்சியாளர்களே ஊக்குவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்... முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திக்க வேண்டும் என்றால் புரோக்கர்கள் மூலமாகத்தான் சந்திக்க முடிகின்றது, இது புரோக்கர்கள் நிறைந்த அரசாக புதுச்சேரி அரசு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி போவதற்கான காரணம் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுதான். இதற்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com