இந்தியா
பேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை
பேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை
புதுச்சேரியில் அரசு அனுமதி கடிதம் இன்றி டிஜிட்டல் பேனர் தயாரிக்க கூடாதென உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பேனர்கள் வைக்க தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆணையிட்டார். இதையடுத்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பேனர்களை வைக்காமல் இருக்க உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பேனர் தடை குறித்து உள்ளாட்சிதுறை இயக்குனர் மலர்கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருமண மண்டபம் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் உரிமையாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். அதன்படி அரசு அனுமதி கடிதம் இன்றி பேனர்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.