புதுச்சேரியில் நாளை முதல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை!
புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்தார். முன்பாக மாஹேவில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.