இந்தியா
புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி பட்ஜெட் தாக்கல் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி பட்ஜெட் தாக்கல் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி மாலையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசின் முதல் கூட்டமாக இது அமைவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ரூ.10,100 கோடி மதிப்பில் பட்ஜெட்டுக்கான திட்ட வரையறை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக புதுவை அரசு அனுப்பியிருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

