\
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா!

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா!

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா!
Published on

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிவக்கொழுந்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார். சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com