\
புதுச்சேரி: மரக்கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து – சேத மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: மரக்கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து – சேத மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: மரக்கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து – சேத மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Published on

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் குமரவேல் என்பவருக்குச் சொந்தமான மரக்கிடங்கு உள்ளது. இங்கு நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம், கதிர்காமம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய 6 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டி இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இந்த தீ விபத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான மரப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com