புதுச்சேரி: அச்சமின்றி ஆர்ப்பரிக்கும் கடலில் பீஸ்ட் பட பேனரை கட்டிய விஜய் ரசிகர்கள்!

புதுச்சேரி: அச்சமின்றி ஆர்ப்பரிக்கும் கடலில் பீஸ்ட் பட பேனரை கட்டிய விஜய் ரசிகர்கள்!

புதுச்சேரி: அச்சமின்றி ஆர்ப்பரிக்கும் கடலில் பீஸ்ட் பட பேனரை கட்டிய விஜய் ரசிகர்கள்!
Published on

ஆர்ப்பரிக்கும் கடலில் ஆபத்தை உணராமல் ஆர்வமுடன் புதுச்சேரி விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட பேனரை படகில் சென்று கட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விஜய் ரசிகர்கள் பிரமாண்ட பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பின் புறம் 200 மீட்டர் தூரத்தில் பிரெஞ்சு ஆட்சியர்களால் கப்பல் துறைமுக போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பாலம் நாளடைவில் இடிந்து அதன் தூண்கள் மட்டும் கடலின் நடுவே தெரியும் படி இருக்கும்.

சமீபகாலமாக அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல நடிகர்களின் பிறந்த நாளின்போது கடலில் தெரியும் இரும்பு தூண்களில் பேனர்களை கட்டி வருகின்றனர். இது ஆபத்தானது என்பதால் இந்த தூண்களில் பேனர்கள் கட்டக்கூடாது என்று போலீசார் அவ்வப்போது கடுமையாக எச்சரித்தும் வருகின்றனர்.

இருப்பினும் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் இருக்கும் நிலையிலும் ஆர்ப்பரிக்கும் கடலில் அச்சப்படாமலும், விபரீதத்தை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் பைபர் படகில் சென்ற விஜய் ரசிகர்கள் பீட்ஸ் பட பேனர்களை கட்டியுள்ளனர் மேலும் இதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com