புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக ரூ.3000 வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நிவாரணத்தொகையாக 4000 ரூபாய்  அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவியேற்றபின்னர், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து அரசுப்பணிகளை கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக ரூ.3000 வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார். இன்று புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com