\
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வெட்டிக்கொலை
Published on

புதுவை முன்னாள் சபாநாயகர் விஎம்சி சிவக்குமார் மர்மநபர்களால் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

தான் கட்டிவந்த திருமண மண்டப கட்டடப் பணிகளை மேற்கொள்ள காரில் சென்று கொண்டிருந்த வி.எம்.சி. சிவகுமாரின் காரை நீராவி- டி.ஆர்.பட்டிணம் அருகே மறித்த அடையாளம் தெரியாத சிலர், அவரை அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

நீராவி-டிஆர்பட்டினர் தொகுதி எம்எல்ஏவாக ஐந்து முறை பதவி வகித்துள்ள சிவக்குமார், 4 முறை திமுக சார்பிலும், திமுக எம்எல்ஏவாக இருந்த போது 96ம் ஆண்டில் இருந்து 2000 ஆண்டு வரையில் அவர் சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார். விவசாயத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். திமுகவில் இருந்து விலகி ஒருமுறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகுமார், பின்னர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com