புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி - இரு தரப்பினரிடையே மோதல்

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி - இரு தரப்பினரிடையே மோதல்

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி - இரு தரப்பினரிடையே மோதல்
Published on

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க முயற்சி. இந்து முன்னணி அமைப்புடன் மோதல்; போலீசார் உட்பட இருவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாழ்த்தப்பட்ட ,பழங்குடியின மக்களை மனுதர்ம சாஸ்திரம் இழிவுபடுத்துவதாகக் கூறி மனுதர்ம சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சாலை அருகே மனுசாஸ்திர நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்த போலீசாh வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இந்து முன்னனி அமைப்பினருக்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து இருதரப்பினரும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில், போலீசார் உள்ளிட்ட இருவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com