புதுச்சேரி: மொத்தமாக மீன்கள் ஏலம் விட தடை... மீனவர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: மொத்தமாக மீன்கள் ஏலம் விட தடை... மீனவர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: மொத்தமாக மீன்கள் ஏலம் விட தடை... மீனவர்கள் தர்ணா போராட்டம்
Published on

புதுச்சேரியில் உள்ள குபேர் அங்காடியில் மொத்தமாக மீன்கள் ஏலம் விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் விற்பனையில் ஈடுபடாமல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேர் அங்காடியில் மொத்தமாக மீன்கள் ஏலம் விடப்பட்டு வந்தது. மேலும் ஏலம் முடிந்த பின்னர் மீன் கழிவுகளை அங்கேயே விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் கடந்த 1ஆம் தேதி முதல் மொத்தமாக மீன்கள் ஏலம் விட மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் மீன்கள் ஏலம் விடுவதற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குபேர் அங்காடியில் சுமார் 500 மீனவர்கள் விற்பனையில் ஈடுபடாமல் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com