புதுச்சேரி: மின்சாரம் தாக்கி 2 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை

புதுச்சேரி: மின்சாரம் தாக்கி 2 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை

புதுச்சேரி: மின்சாரம் தாக்கி 2 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை
Published on

புதுச்சேரியில் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அம்மன் நகரில் மகேந்திரன் என்பவர் அடுக்குமாடி வீடுகட்டி வருகிறார். வீடு கட்டும் பணியில் கட்டுமான பணி தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர் இன்று வீட்டின் 3 ஆவது மாடியில் தளம் ஒட்டும் பணியில் திருகோவிலூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது இவர்கள் மீது தளத்தின் மேல் இருந்த வயரிலிருந்து மின்சாரம் தாக்கியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன்குமார் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். செல்வகுமாரை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டேரிக்குப்பம் போலீசார் இரு தொழிலாளர்களின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com