இந்தியா
வட்டத்தை தாண்டக்கூடாது: புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை
வட்டத்தை தாண்டக்கூடாது: புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை
அவரவர் எல்லைக்குள் இயங்க வேண்டும் என புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் நடைபற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், நிர்வாகம் சட்டம் நீதித்துறைக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அவரவர் எல்லைக்குள் இயங்க வேண்டும் மீறினால் போலீஸ் ரஜ்ஜியம்போல் நாடு மாறி விடும். குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஆகையால் அவரவர் எல்லைக்குள் இயங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கும் இடையே அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.