இந்தியா
கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு - தலைமை தேர்தல் ஆணையம்
கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு - தலைமை தேர்தல் ஆணையம்
கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான எல்லா பணிகளின் போதும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகழுவுவதற்கான சோப்பு, சானிடைசர், வெப்ப பரிசோதனை கருவி போன்ற பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.
பரப்புரையின்போது தனிநபர் இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். வேட்பாளர் உள்ளிட்ட 5 பேருக்கு மேல் பரப்புரைக்கு அனுமதிக்க கூடாது. மின்னனு வாக்கு இயந்திரங்களை தூய்மைப்படுத்தியபிறகே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1000 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.