3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு
3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவுத்தலின்படி, 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் பொருளாதார பாரத்தை குறைக்கும் வகையில் அனைத்து வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்கள் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூன்று மாதங்களுக்கு மாத தவணை வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளன.

இதேபோல் ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஓபிசி வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, யூகோ வங்கி, சிண்டிகேட் பேங்க் ஆகிய வங்கிகளும் மாத தவணை விலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் இது குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு விரிவான விவரங்களுடன் மின்னஞ்சல் உள்ளிட்ட வழிகளில் தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வரும் 3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான தவணை செலுத்தத்தேவையில்லை என்று தமிழ்நாடு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

சென்னையில் இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவையைத் தொடக்கி வைத்த கிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வரும் 3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான அசல் தொகையோ, வட்டியோ செலுத்தத் தேவையில்லை என்றும், இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com