ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்டதோடு பழங்கள் கொடுத்து பசியாற்றிய பொதுமக்கள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்டதோடு பழங்கள் கொடுத்து பசியாற்றிய பொதுமக்கள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்டதோடு பழங்கள் கொடுத்து பசியாற்றிய பொதுமக்கள்

கர்நாடகாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பொதுமக்கள் மீட்டு உணவு வழங்கினர்.

கர்நாடக மாநிலம்  குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டை என அனைத்தும்  நிரம்பி வழிகிறது.  மேலும்  தண்ணீர் எங்கும்  பெருக்கெடுத்து ஓடுவதால் வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மஞ்சள்ளி பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது. இதையறிந்த  அப்பகுதி மக்கள் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிய குட்டி யானையை உள்ளூர் மக்கள் மீட்டனர்.

பசியால் தவித்த அந்த குட்டி யானைக்கு வீட்டில் வைத்து பழம் மற்றும் உணவுகளை மக்கள் வழங்கினர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையிடம் குட்டி யானையை ஒப்படைத்தனர். மட்டிகோடு யானைகள் முகாமில் சேர்க்கப்பட்ட அந்த குட்டி யானைக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com