இந்தியா
8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க உச்சநீதிமன்றத்தில் மனு
8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க உச்சநீதிமன்றத்தில் மனு
பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் இந்தியை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்குமாறு பாஜக பேச்சாளரும், வழக்கறிருமான அஷ்வினி குமார் உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மாநில மொழிகளில் கல்வி கற்ற அரசு அதிகாரிகளும், நீதித்துறையின் உறுப்பினர்களும், வேறொரு மாநிலத்திற்கு பணி மாறுதல் பெறும்பொழுது அந்தந்த மாநில மொழியில் பேசுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், பொதுவாக ஒரே மொழியில் பேசிக்கொள்வதற்கான நடவடிக்கையாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவிக்குமாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 5-வது அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது. இது இந்தியர்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.