வேலை பளுவினால் தற்கொலை செய்து கொண்ட ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் 

வேலை பளுவினால் தற்கொலை செய்து கொண்ட ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் 

வேலை பளுவினால் தற்கொலை செய்து கொண்ட ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் 
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் (PTI) மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் பி.வி. ராமானுஜம்.

நேற்று இரவு அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

"வழக்கம் போல புதன்கிழமை இரவு வரை அவர் வேலை செய்துள்ளார். காலை 7 மணி அளவில்  வீட்டில் உள்ள அலுவலகத்தில் அவர் தூக்கில் அசைவில்லாமல் தொங்கியதை அவரது மனைவி பார்த்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பத்திரிகையாளர் ராமானுஜம் சமீப நாட்களாக மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அவரது தற்கொலை தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com