PT HEADLINES
PT HEADLINESpt web

PT HEADLINES |தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டம் முதல் மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளில், தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டம் முதல் மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை பார்க்கலாம்.
Published on
  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு திமுக அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

  • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை... நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

  • பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தல்களில் அதிமுகவுக்கு பின்னடைவுதான் என்றும் சர்வாதிகாரப்போக்குடன் பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

  • செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக இருந்ததாக எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... கட்சியில் இருந்து நீக்கப்பட்டோருடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம்.

  • அரசியல் கட்சித் தலைவர்களின் சாலை வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி என தகவல். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

  • வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு... தமிழ்நாட்டில் 7ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிப்பு.

  • சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை. மேலும், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கபடி வீரர் அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு. மேள தாளங்கள் முழங்க வரவேற்ற ஊர் மக்கள்.

  • ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.

  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘DC’ என டைட்டில்... அடுத்தாண்டு படம் வெளியாகும் என அறிவிப்பு.

  • பீகாரில் ஜன்சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரை கைது செய்தது காவல் துறை.

  • பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம். தொடர்ந்து, போஜ்பூர், நவாடாவில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

  • பீகார் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பிரியங்கா காந்தி. மேலும், இத்தனை ஆண்டுகளாக தராதவர்கள் இனிதான் தரப்போகிறார்களா என ஒரு கோடி வேலை வாக்குறுதி குறித்து கேள்வி.

  • மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை. கோப்பையை வென்றால் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ திட்டம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com