மேற்குவங்கம்: வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ஆளுநர்; மம்தா எதிர்ப்பு

மேற்குவங்கம்: வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ஆளுநர்; மம்தா எதிர்ப்பு
மேற்குவங்கம்: வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ஆளுநர்; மம்தா எதிர்ப்பு

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட மாநில ஆளுநர் திட்டமிட்டுள்ள நிலையில், அவரின் முடிவுக்கு முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து,  பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய இந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடைபெற்ற பகுதிகளை மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் இன்று நேரில் பார்வையிடுகிறார். வன்முறை நடைபெற்ற மாவட்டங்களில் ஒன்றான கோச் பிஹர் மாவட்த்தை கவர்னர் ஜக்தீப் இன்று நேரில் பார்வையிடுகிறார்.

இந்த ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்யும் படி மாநில அரசிடம் தெரிவித்த போதும் மாநில அரசு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இன்று மேற்கொள்ள ஆய்வு பயணத்தின் போது பி.எஸ்.எஃப். படையினரின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''ஆளுநரின் தன்னிச்சையாக முடிவு நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே, கள ஆய்வுகள் தொடர்பாக திடீர் முடிவுகள் எடுப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமன்றி மாநில அரசு அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததையும் ஆளுநர் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் கவர்னர் திட்டமிட்டபடி இன்று வன்முறை நடந்த பகுதிகளை பார்வையிட உள்ளதாக அம்மாநில ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com