மத்திய வேளாண் அமைச்சரை சந்திக்கின்றனர் போராடும் விவசாயிகள்

மத்திய வேளாண் அமைச்சரை சந்திக்கின்றனர் போராடும் விவசாயிகள்
மத்திய வேளாண் அமைச்சரை சந்திக்கின்றனர் போராடும் விவசாயிகள்

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் 15-ஆவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதன்பின் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சந்தித்து பேச உள்ளனர். மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழக அமைச்சர் துரைக்கண்ணு-வின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com