
ஒரு ஆடு காரணமாக நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு 2 கோடியே 68 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
ஒடிசாவில் கோல் இந்தியா நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. அங்கிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு புறப்பட்ட லாரி, குறுக்கே வந்த ஆடு மீது மோதியதில் ஆடு உயிரிழந்தது. அதற்கு நஷ்ட ஈடாக 60 ஆயிரம் ரூபாய் தரக்கோரி, பக்கத்து கிராமத்தினர் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில் பாதையையும் மறித்து போராட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 வரை நடந்த போராட்டத்தால் ரயில் வேகன்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வது தடைபட்டு 2 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் புகார் அளித்துள்ளது.