வக்ஃப் திருத்த சட்டம்முகநூல்
இந்தியா
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் வெடித்த போராட்டம்!
இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மேற்குவங்க மாநிலம், ஜான்கிபூரில் ஏராளமானோர் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் துறையின் வாகனத்தை கவிழ்த்து தீ வைத்ததால் அப்பகுதி வன்முறை களமாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.