பெங்களூர் வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு - தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெங்களூர் வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு - தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெங்களூர் வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு - தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

பெங்களூருவுக்கு வருகை தந்துள்ள இலங்கை முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி தலைவருமான ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நட‌‌த்தினர்.‌ 

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சே இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தருவார். அந்த வகையில், பெங்களூரு நகரில் நடைபெறும்  இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்கபதற்காக ராஜபக்சே வந்துள்ளார். இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்நிலையில் பெங்களூரில் ராஜபட்சேவுக்கு எ‌திர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஏராளமானோர் கருஞ்சட்டை‌ அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவித்து இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும், இந்தியாவை விட்டு உடனே வெளியேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com