சிஏஏவுக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்: பல இடங்களில் 144 தடை உத்தரவு

சிஏஏவுக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்: பல இடங்களில் 144 தடை உத்தரவு
சிஏஏவுக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்: பல இடங்களில் 144 தடை உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது. இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 14 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பெங்களூருவின் சில பகுதிகளில், உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி பலரும் போராட்டத்தின் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் வக்பு வாரிய கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிக்கை வைத்தனர்.

இதேபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக‌ கடலூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து சுமார் ‌700/க்கும் மேற்பட்‌ட மாணவிகள் மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கடலூர் பெரியார் அ‌ரசு கலை ‌கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com