பிடா சட்டத்தின்  நோக்கம் பாலியல் தொழிலை ஒழிப்பதல்ல : மும்பை நீதிமன்றம்

பிடா சட்டத்தின் நோக்கம் பாலியல் தொழிலை ஒழிப்பதல்ல : மும்பை நீதிமன்றம்

பிடா சட்டத்தின் நோக்கம் பாலியல் தொழிலை ஒழிப்பதல்ல : மும்பை நீதிமன்றம்
Published on

வணிக நோக்கங்களுக்காக ஒரு நபரை சுரண்டுவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது மற்றும் பொது இடங்களில் பாலியல் தொழிலுக்காக கேட்டுக்கொள்வது ஆகியவையே சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மும்பை சின்சோலி பைண்டர் பகுதியில் இருந்து மும்பை காவல்துறையின் சமூக சேவை கிளையால் 2019 செப்டம்பரில் மூன்று பெண்கள் ஒரு "வாடிக்கையாளரை" திட்டமிட்டு அழைத்தபோது மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒரு பெருநகர மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர் அவர்களை பெண்கள் விடுதியில் தங்கவைக்க உத்தரவிட்டார்.

அக்டோபர் 19, 2019 அன்று, அந்த பெண்களுக்கு தங்கள் பெற்றோருடன் தங்க விருப்பம் இல்லை என்று மாஜிஸ்திரேட் கண்டறிந்ததால், அந்த பெண்களை உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் வழக்கறிஞர் அசோக் சரோகி மூலம் நீதிமன்றத்தை நாடினார்கள் இப்பெண்கள்.

இரண்டு உத்தரவுகளையும் கடந்த வியாழக்கிழமை நிறுத்திவைத்த மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நபர் அமர்வு "மனுதாரர்கள் / பாதிக்கப்பட்டவர்கள் பெரியவர்கள். எனவே, அவர்கள் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும், இந்தியா முழுவதும் சுதந்திரமாகச் செல்வதற்கும், தங்கள் சொந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை உண்டு என்று இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பொதுச் சட்டத்தால் வழங்கப்படும் வேறு எந்த உரிமையையும் விட குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உயர்ந்த பீடத்தில் நிற்கின்றன. 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிடா சட்டத்தின்  நோக்கமும் பாலியல் தொழிலை ஒழிப்பதல்ல” என்று நீதிபதி பிருத்விராஜ் சவான் கூறினார்.

சட்டத்தின் கீழ் பாலியல் தொழில் ஒரு கிரிமினல் குற்றமாக கருதி தண்டிக்கும் எந்தவொரு விதியும் இல்லை. ஒரு நபரை வணிக நோக்கங்களுக்காக சுரண்டுவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது மற்றும் பொது இடங்களில் தொழிலுக்காக கேட்டுக்கொள்வது என்பதுதான் தண்டனைக்குரிய குற்றம் என்பதை தெளிவுபடுத்திய நீதிமன்றம்  மூன்று இளம் பெண்களையும் விடுவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com