இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும் பிரபல விஞ்ஞானியுமான யு.ஆர்.ராவ் இன்று காலமானார்.
கர்நாடக மாநிலத்தின் அதம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் பிரபல விஞ்ஞானியுமான உடுப்பி ராமச்சந்திர ராவ். உடல்நலக்குறைவு காரணமாக
பெங்களூரில் உள்ள இல்லத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
85 வயதான அவருக்கு கடந்த ஜனவரி மாதம் நாட்டின் 2வது உயரிய குடிமக்கள் விருதான பத்மவிபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்திருந்தது. யு.ஆர்.ராவ் என அறியப்படும் உடுப்பி ராமச்சந்திர ராவ் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.