“என்னால தாங்க முடியல லீவ் கொடுங்க” - மகாராஷ்டிர அரசியல் திருப்பத்தால் ஷாக் ஆன பேராசிரியர்

“என்னால தாங்க முடியல லீவ் கொடுங்க” - மகாராஷ்டிர அரசியல் திருப்பத்தால் ஷாக் ஆன பேராசிரியர்

“என்னால தாங்க முடியல லீவ் கொடுங்க” - மகாராஷ்டிர அரசியல் திருப்பத்தால் ஷாக் ஆன பேராசிரியர்
Published on

மகாராஷ்டிர அரசியல் திருப்பத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் ஒருவர் லீவ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நொடிக்கு நொடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. எப்பொழுது என்ன நடக்கும் என்றே யூகிக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு வரை சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளதாகதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை சரத்பவாரே பேசும் போது உத்தவ் தாக்கரேதான் முதலமைச்சர் என்று கூறினார். 

நேற்றைய செய்தித்தாள்கள் எல்லாவற்றின் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார் என்றுதான் வந்திருந்தது. ஆனால், காலை எல்லோரும் செய்திதாள்களை படிக்கும் முன்பே அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சிகளில் அதிர்ச்சியான செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. அதாவது, தேவேந்திர பட்னாவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கம் முதல் பதவியேற்பு வரை எல்லாமுமே 24 மணி நேரத்தில் முடிந்திருக்கிறது.

இந்தச் செய்தியை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியே ஏற்பட்டது. பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்த போது சில கேள்விகள் எழுந்த போதும், அவரே உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என கூறியதால் நிச்சயம் ஆட்சி அமைத்துவிடுவார்கள் என்று பலரும் நம்பினர். இந்தச் செய்தி பார்த்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சந்திரபூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் ஆங்கில பேராசிரியரான ஜஹீர் சையதுதான் இந்தஅதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். இந்தச் செய்தியை பார்த்ததும் தனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை என்றும் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். அவரது இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இந்தக் காரணத்திற்காக அவர் விடுமுறை கோரிய அந்த விண்ணப்பம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com