மத்திய அரசு ரூ1,45,980 கோடி ஊக்கத்தொகை: 10 உற்பத்தித் துறைகளுக்கு தலா எவ்வளவு?

மத்திய அரசு ரூ1,45,980 கோடி ஊக்கத்தொகை: 10 உற்பத்தித் துறைகளுக்கு தலா எவ்வளவு?
மத்திய அரசு ரூ1,45,980 கோடி ஊக்கத்தொகை: 10 உற்பத்தித் துறைகளுக்கு தலா எவ்வளவு?

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
PLI will give the right impetus to the Indian economy. Its aimed at promoting job creation, linking India to the global value chain & building a self-reliant India.

With this landmark decision of PM @narendramodi, India will become an important manufacturing and investment hub.

— Amit Shah (@AmitShah) November 11, 2020
இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடையும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பத்து துறைகளின் விவரங்கள் வருமாறு:
* மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம் - (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: நிதி ஆயோக் மற்றும் கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 18,100 கோடி ரூபாய்.
* மின்னணு/தொழில்நுட்பப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாய்.
* வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 57042 கோடி ரூபாய்.
The sectors that will benefit from the Production Linked Incentive Scheme announced today include battery manufacturing, electronics, auto, pharma, telecom, textiles, food products, solar, white goods, and speciality steel. Here are the details: pic.twitter.com/UfJgIFlMFp

— NSitharamanOffice (@nsitharamanoffc) November 11, 2020
* மருந்துகள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மருந்துகள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 15000 கோடி ரூபாய்.
* தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொலைதொடர்பு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 12195 கோடி ரூபாய்.
* ஜவுளிப் பொருட்கள்: மனிதர்களால் செய்யப்படும் இழைகள் பிரிவு மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை): ஜவுளி அமைச்சகம், ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10683 கோடி ரூபாய்.
உணவுப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10900 கோடி ரூபாய்.
Production linked incentive approved for 10 sectors. pic.twitter.com/OMH2Q7120Q

— Prashant Nair (@_prashantnair) November 11, 2020
* அதிகத் திறன் கொண்ட சூரிய சக்தி ஒளி மின்னழுத்தப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 4500 கோடி ரூபாய்.
* வீட்டுப்பயன் கருவிகள் (குளிர்சாதனப் பெட்டிகள் & எல் ஈ டி) (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6238 கோடி ரூபாய்.
* சிறப்பு எஃகு (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: எஃகு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6322 கோடி ரூபாய்.
ஐந்து வருட காலத்துக்கு மேற்கண்ட அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 145980 கோடி ரூபாய் உற்பத்தி சார்ந்த உதவித் தொகையாக வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com