சிறுவர்களை பாதிக்க வாய்ப்பு - கொரோனா மூன்றாவது அலையில் என்னென்ன சிக்கல்களெல்லாம் வரலாம்?

சிறுவர்களை பாதிக்க வாய்ப்பு - கொரோனா மூன்றாவது அலையில் என்னென்ன சிக்கல்களெல்லாம் வரலாம்?
சிறுவர்களை பாதிக்க வாய்ப்பு - கொரோனா மூன்றாவது அலையில் என்னென்ன சிக்கல்களெல்லாம் வரலாம்?

கொரோனா மூன்றாவது அலை குறித்து நமக்கு இருக்கும் பொதுவான தகவல்கள் மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் சிக்கல்கள் பற்றிய சிறு தொகுப்பு

கொரோனா மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டுமென, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. அது எப்போது வரும் என்பது பற்றி கணிக்க முடியாது என்பதால், அரசு இப்போதிருந்தே அனைத்துக்கும் தயாராகி வருகிறது.

மூன்றாவது அலை கொரோனாவில், அப்போது உருமாறியிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகள் கிடைக்குமா என்பதுதான் சிக்கலாக இருக்குமென கூறப்படுகிறது. இப்போதைக்கு, கொரோனா மூன்றாவது அலை குறித்து நமக்கு இருக்கும் பொதுவான தகவல்கள் மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் சிக்கல்கள் பற்றிய சிறு தொகுப்பு இங்கே:

* இந்தியாவில் பரவலாக இருந்துவரும் கொரோனா உருமாற்றங்கள், மேற்கொண்டு நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி நிறைய மாற்றங்கள் நிகழ்வதாலேயே, கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் கணிக்கின்றனர்.

* இதுவரை இந்தியாவில் உருமாறியிருக்கும் கொரோனா வகைகளில், B.1.617 என்ற வகைதான், மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட ஆந்திராவில் பரவிய உருமாறிய கொரோனா வகை, ஒருசில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றது.

* இதுவரை ஏற்பட்ட கொரோனா உருமாற்றங்களில், முதல் அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய உருமாற்றம், நுரையீரலை முழுமையாக அழிக்க 10 நாள்கள் வரை நேரம் எடுத்துக் கொண்டது. இரண்டாவது அலையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா, 5 - 7 நாள்கள் வரைதான் காலம் எடுத்துக்கொள்கிறது. இந்த இடைவெளி, மூன்றாவது அலையில் 2 - 3 நாள்களுக்கு என குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இப்போது ஆந்திராவில் பரவும் கொரோனா வகை, நுரையீரலை மிக குறுகிய காலத்தில் பாதிக்கிறது. அதாவது, 2 - 3 நாள்களுக்குள் பாதிக்கிறது. பிற வகைகளைவிட, ஆந்திராவில் பரவும் கொரோனா உருமாற்றம், 15 மடங்கு வேகமாக செயலாற்றுகின்றது.

* முதல் இரண்டு அலைகளிலும், வயதானவர்களும் இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

* 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்திய மக்கள் தொகையில், 30 சதவிகிதம் இருக்கின்றனர். இவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இப்போதுவரை உலகில் எதுவும் அறியப்படவில்லை. ஆகவே, இவர்களை நம்மால் கொரோனாவுக்கு எதிராக மாற்றும் வழிமுறைகள் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.

* ஒருவேளை 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டால், இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேரை கொரோனாவுக்கு எதிரானவர்களாக நம்மால் மாற்ற முடியும். அப்படி செய்தால், கொரோனா பரவும் விகிதம் தடுக்கப்பட்டு, கொரோனாவின் வீரியமும் குறைக்கப்பட்டு, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தீவிர கொரோனா தாக்குதலில் இருந்து ஓரளவு நம்மால் காக்க முடியும்.

* உருமாறிக்கொண்டே இருக்கும் கொரோனாவை அழிக்க, தடுப்பூசிகளும் மேம்படுத்தவேண்டியது அவசியம். அதற்கான ஆய்வுகள் முக்கியம். அப்போதுதான் அடுத்தடுத்து வரும் கொரோனாவை நம்மால் கட்டுக்கொள் கொண்டு வரமுடியும்.

தகவல் உறுதுணை: She The People

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com