கர்நாடகா மாநிலக் கொடிகளில் ராகுல் காந்தியின் புகைப்படம் - கன்னட அமைப்புகள் கண்டனம்

கர்நாடகா மாநிலக் கொடிகளில் ராகுல் காந்தியின் புகைப்படம் - கன்னட அமைப்புகள் கண்டனம்
கர்நாடகா மாநிலக் கொடிகளில் ராகுல் காந்தியின் புகைப்படம் - கன்னட அமைப்புகள் கண்டனம்

கர்நாடகா மாநிலக் கொடிகளில் ராகுல் காந்தியின் படத்தை அச்சிட்டதற்காக காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைக் கடந்த தற்போது பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கிறது.

கன்னட அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிகளில் மஞ்சள், சிவப்பு வண்ணக் கொடியை கர்நாடகா மாநிலக் கொடியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மைசூருவில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கர்நாடகா மாநிலக் கொடிகளை காங்கிரஸ் கட்சியினர் ஏந்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இச்செயலுக்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடகா மாநிலக் கொடிகளில் ராகுல் காந்தியின் படத்தை அச்சிட்டதற்காக காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கர்நாடகா கொடியில் எந்தவொரு அரசியல் தலைவரின் புகைப்படத்தையும் பயன்படுத்தக் கூடாது எனவும் கன்னட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

கன்னட அமைப்பினர் மஞ்சள், சிவப்பு வண்ணக் கொடியை கர்நாடக மாநிலத்தின் கொடியாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சித்தராமையா முதல்வராக இருந்தபோது கர்நாடகாவுக்கு என்று தனியாகக் கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி கோர முயற்சிகள் மேற்கொண்டார். அந்த கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில்  கன்னட அமைப்பினர் தங்களது நிகழ்வுகளில் மஞ்சள், சிவப்பு வண்ணக் கொடியை கர்நாடகா மாநிலக் கொடியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாத யாத்திரை.!தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com