ரையான்-அவிவா நிச்சயதார்த்தம்: பிரியங்கா காந்தி வாழ்த்து
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வதேரா மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகன் ரையான் வதேரா, தனது நீண்ட காலத் தோழியான அவிவா பைக் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.ரையான் வதேரா மற்றும் அவிவா பைக் ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் (டிசம்பர் 29, 2025) ராஜஸ்தானின் ரணதம்பூரில் மிக எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ரையான், அந்தப் பதிவில் "29.12.25" என்ற தேதியைக் குறிப்பிட்டு, மோதிரம் மற்றும் இதயக் குறியீடுகளைப் பதிவிட்டுள்ளார்.இவர்கள் இருவரும் தங்களது 3 வயதிலிருந்தே சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதனை நினைவுகூரும் வகையில், அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட ஒரு பழைய புகைப்படத்தையும் ரையான் பகிர்ந்துள்ளார். "நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தும், மதித்தும் எப்போதும் சிறந்த நண்பர்களாகவே இருக்க வேண்டும்" என்று தனது மகன் மற்றும் மருமகளுக்கு பிரியங்கா காந்தி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவிவா பைக் யார்?
அவிவா பைக் டெல்லியைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 'அட்லியர் 11' (Atelier 11) என்ற ஸ்டுடியோவின் இணை நிறுவனர். மேலும், இவர் தேசிய அளவிலான முன்னாள் கால்பந்து வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் நந்திதா பைக், பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியாவார்.

