“ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி 

 “ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி 

 “ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி 
Published on

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், நேற்று ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அவர் இல்லை என தெரிந்ததும் 2 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். மேலும் ப.சிதமபரத்தின் இ-மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் இன்னும் ஆஜராகவில்லை. 

இதையடுத்து தற்போது மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் இல்லத்துக்கு சென்றனர். கடந்த 24 மணி நேரத்துக்குள் 3 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு வருகை புரிந்தனர். அங்கு அவர் இல்லை என்றதும் திரும்பி சென்றனர். 

இதனிடையே ப.சிதம்பரத்தை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிபிஐ நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில்,  “மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் எதற்கும் அச்சப்படாமல், உண்மையை பேசி வருகிறார். சிதம்பரத்தை வேட்டையாடுவது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாகவே இருக்கும். எம்.பி, நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என நாட்டிற்கு விசுவாசத்துடன் சேவையாற்றிவர் ப.சிதம்பரம். அவரை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com